பள்ளிச் செயல்பாடுகளை வழி நடத்துவதற்கான சீர்தர இயக்கச் செயல்முறை
December 11 , 2024 12 days 94 0
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையானது, பள்ளிகளில் சுற்றுலா, மன்ற விவாதங்கள் மற்றும் செயல்பாடுகளை நடத்துவதற்கான சீர்தர செயல்பாட்டுச் செயல்முறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த வகையான நிகழ்வுகளுக்கு விருந்தினாராக யாரை அழைக்கலாம் என்பதையும் இது குறிப்பிடுகிறது.
இதில் பள்ளிகளானது, கல்வித் துறையால் பராமரிக்கப்படும் முன் அங்கீகரிக்கப்பட்ட முதுநிலைப் பட்டியலைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் கூறப் பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்கள் ஆனது, CBSE மற்றும் பிற துறைகளின் கீழ் உள்ள பள்ளிகள் உட்பட தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும்.
பள்ளிக் கல்வித்துறைச் செயலாளரைத் தலைவராகக் கொண்டு மாநில அளவிலான குழுவும், ஆட்சியாளரைத் தலைவராகக் கொண்ட மாவட்ட அளவிலான குழுவும் இதில் அமைக்கப் பட உள்ளது.
இந்தக் குழுவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்டச் சமூக நல அலுவலர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், குழந்தைகள் நல அலுவலர், கல்வி அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.