TNPSC Thervupettagam

பள்ளி ஆவணங்களை கணினிமயமாக்கல்

July 18 , 2017 2687 days 1183 0
  • தேசிய கல்விக் கருவூலம் (National Academic Depository - NAD) என்பது பல்வேறு கல்வி நிறுவனங்கள் / பள்ளி குழுமங்கள் / தகுதி மதிப்பீட்டு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட கல்வி சார்ந்த சான்றிதழ்களின் இணைய சேமிப்புத் தளம் ஆகும். இந்த சேவையானது 24 மணி நேரமும் இயங்கும்
  • பட்டதாரி மற்றும் பட்டய சான்றிதழ்கள், மதிப்பெண் திறன் சான்றிதழ்கள், போன்றவற்றை இக்கருவூலத்தில் சேமித்து வைக்கலாம்.
  • தேசிய கல்விக் கருவூலத்தை செயல்படுத்தும் பொறுப்பும் அங்கீகாரமும் பல்கலைக் கழக மானியக் குழுவை (University Grants Commission) சேரும்.
  • தேசிய கல்விக் கருவூலம் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய இரண்டு கருவூலங்களைக் கொண்டது.
    • NSDL தரவுத்தள மேலாண்மை நிறுவனம் (NSDL Database Management Limited - NDML)
    • CDSL வென்சர்ஸ் லிமிடெட் (CVL)
  • இதுபோல் கல்வித் தகுதி ஆவணங்களை இணைய வழி சேமிப்புத் தளங்களில் சேமித்து வைப்பது எளிய முறையில் வேகமாக ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ள உதவுவது மட்டுமின்றி போலி ஆவணங்களை தடுக்கவும் உதவும்.
  • இணைய வழி பதிவிற்கும், பயன்பாட்டிற்கும் ஆதார் தரவுதளம் உபயோகிக்கப்படும். ஆதார் எண் இல்லாதபட்சத்தில் NAD அடையாள எண் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் டிஜிட்டல் சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்