TNPSC Thervupettagam

பழங்குடியினரின் நில உரிமை கோரல்கள் பற்றிய புள்ளி விவரங்கள்

October 4 , 2023 292 days 214 0
  • பழங்குடியினர் விவகார அமைச்சகத்தினால் தொகுக்கப்பட்ட சமீபத்தியப் புள்ளி விவரங்கள் ஆனது, 45,54,603 நில உரிமை கோரிக்கைகளில் 18,01,561, அதாவது சுமார் 40% கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டுள்ளன.
  • 23 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் பதினொன்றில் நிராகரிப்பு விகிதம் ஆனது தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.
  • இதில் உத்தரகாண்ட் (97.23%), கர்நாடகா (84.9%), உத்தரப் பிரதேசம் (79.75%), ஜம்மு காஷ்மீர் (78.21%), மேற்கு வங்காளம் (67.98%), பீகார் (52.54%), மத்தியப் பிரதேசம் (51.43%), ராஜஸ்தான் (52.94%), தெலுங்கானா (45.62%), சத்தீஸ்கர் (42.99%) மற்றும் தமிழ்நாடு (39.64%) ஆகியவை அடங்கும்.
  • 2006 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம் ஆனது, ஒரு இடத்தில் வசிக்கும் பழங்குடியினருக்கு முறையான பட்டாக்கள் அளிப்பதன் மூலம் அவர்களின் நிலத்தின் மீதான உரிமையினை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்