TNPSC Thervupettagam

பழங்குடியினர் ஆராய்ச்சிக்கான தமிழ்நாடு புத்தாய்வு மாணவர் திட்டம்

November 8 , 2024 21 days 95 0
  • மாநில அரசானது, பழங்குடியினர் ஆராய்ச்சிக்கான தமிழ்நாடு புத்தாய்வு மாணவர் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பழங்குடியினச் சமூகங்கள் தொடர்பான சில துறைகளில் பணிபுரியும் 45 ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட 70 மாணவர்களுக்கு ஆதரவளிப்பதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் புத்தாய்வு மாணவர் உதவித் தொகைத் திட்டத்தினை வழங்குவதற்கான சில வழிகாட்டுதல்களை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட 45 ஆராய்ச்சி மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் Ph.D. அல்லது முனைவர் பட்டம் பெற்றதற்குப் பிந்தைய ஆராய்ச்சிக்காக அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 25,000 ரூபாய் புத்தாய்வு மாணவர் உதவித்தொகை கிடைக்கும்.
  • இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களில் ஒவ்வொருவருக்கும் ஆறு மாதங்களுக்கு மாதாமாதம் சுமார் 10,000 ரூபாய் புத்தாய்வு மாணவர் உதவித் தொகை வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது ஆண்களுக்கு 50 ஆகவும், பெண்கள் மற்றும் திருநர்களுக்கு 55 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்