பாரத் ஊரக வாழ்வாதார அறக்கட்டளையானது, அதன் முதல் வகை பழங்குடியினர் மேம்பாட்டு அறிக்கையினை (2022) வெளியிட்டுள்ளது.
இது அகில இந்திய அளவில் மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் உள்ள பழங்குடியின சமூகங்களின் நிலையை மதிப்பிடுகிறது.
இது வாழ்வாதாரம், வேளாண்மை, இயற்கை வளங்கள், பொருளாதாரம், இடம்பெயர்வு, ஆளுகை, மனித மேம்பாடு, பாலினம், சுகாதாரம், கல்வி, கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பொறுத்துப் பகுப்பாய்வு செய்கிறது.
இந்தியாவிலுள்ள பழங்குடியினச் சமூகங்கள் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாட்டின் மக்கள்தொகையில் 8.6% ஆகும்.
இந்தியாவின் 80% பழங்குடியினச் சமூகத்தினர் மத்திய இந்தியாவில் வாழ்கின்றனர்.
257 பட்டியலிடப்பட்ட பழங்குடியின மாவட்டங்களில், 230 (90%) மாவட்டங்கள் காடுகள் அல்லது மலைகள் நிறைந்தவை அல்லது வறண்ட பகுதிகளாகும்.
ஆனால் அவர்கள் இந்தியாவின் பழங்குடியின மக்கள் தொகையில் 80% ஆக உள்ளனர்.
அவர்கள் வண்டல் சமவெளிகள் மற்றும் வளமான ஆற்றுப் படுகைகளிலிருந்து நாட்டின் மிகக் கடுமையான சுற்றுச்சூழல் பகுதிகளான மலைகள், காடுகள் மற்றும் வறண்ட நிலங்களுக்குள் இடம் பெயர்வதற்குக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.