சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பனி யுகத்தைச் சேர்ந்த கடல் நீரின் மீதமுள்ளவற்றைக் கண்டறிந்துள்ளனர்.
இவர்கள் மாலத்தீவை உருவாக்கும் சுண்ணாம்புக் கல் படிவுகளை ஆய்வு செய்யும் போது இவற்றைக் கண்டுபிடித்தனர்.
இந்த ஆய்வு ஆழ்புவி மாதிரிக்கான கூட்டுக் கடலியல் நிறுவனங்களின் (Joint Oceanographic Institutions for Deep Earth Sampling - JOIDES) கப்பலிலிருந்து மேற்கொள்ளப்பட்டது.
புவியின் கருப் பகுதியின் மாதிரிகளை சேகரித்து அவற்றை ஆய்வு செய்வதற்காக ஆழ்கடலின் தரைப் பரப்பிற்குள் துளையிடப்பட்டது.
பருவ நிலை மாற்றம், புவியியல் அமைப்பு மற்றும் புவியின் வரலாறு ஆகியவைப் பற்றி அறிந்துக் கொள்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகின்றனர்.