TNPSC Thervupettagam

பழம்பெரும் பாரம்பரிய பாடகர் கிரிஜா தேவி காலமானார்.

October 26 , 2017 2588 days 859 0
  • புகழ்பெற்ற பாடகர் மற்றும் பத்ம விபூசன் விருது பெற்ற கிரிஜா தேவி காலமானார்.
  • பனாரஸ் கரானாவின் புகழ்பெற்ற பாடகரான இவர் அப்பாஜி என்று அன்பாக அழைக்கப்படுகிறார். இவர் 1972ல் பத்மஸ்ரீ, 1989ல் பத்மபூஷன் மற்றும் 2016ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதுகளை வாங்கியுள்ளார்.
  • இவர் ‘தும்ரி’ யின் ராணி என்று அழைக்கப்படுகிறார்.
  • இது ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையின் த்ருபாத், காயல் போன்ற இசை வடிவமாகும்.
  • தும்ரி என்பது உத்திரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து தோன்றிய இந்தியப் பாரம்பரிய இசையின் பகுதி வடிவம் கொண்ட பொது வகையைச் சேர்ந்ததாகும்.
  • இதில் இசை இலக்கணம் பின்பற்றப்படாது. மேலும் இது குறைந்த அல்லது கலப்பு ராகங்களை அடிப்படையாகக் கொண்டது.
  • இந்த இசை வடிவமானது அதன் குரல் மற்றும் கருவி வடிவங்களில் உள்ளது.
  • இதன் கருப்பொருள்கள் முதன்மையாக காதல் சம்பந்தப்பட்டவையாகவும், குறிப்பாக காதலர்களின் பிரிவு மற்றும் கிருஷ்ணரின் குறும்புத்தனங்கள் அவரை விளையாட்டுப் பிள்ளையாக சித்தரிப்பது ஆகிய விஷயங்களிலும் கவனம் கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்