May 8 , 2019
2030 days
1128
- முதன்முறையாக பழுப்பு மலை அணிலின் 300க்கும் மேற்பட்ட கூடுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.
- இதன் அறிவியல் பெயர் ரத்துபா மக்ரோரா என்பதாகும்.
- தமிழ்நாட்டின் செஞ்சிக்கு அருகில் உள்ள (கிழக்குத் தொடர்ச்சி மலை) பக்கமலை காப்பு காடுகளில் இவை காணப்பட்டுள்ளன.
- தமிழ்நாடு அரசானது 1988 ஆம் ஆண்டில் பழுப்பு மலை அணில் வனவிலங்கு சரணாலயத்தை ஏற்படுத்தியது.
- இதன் பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும் (குறிப்பாக ஸ்ரீ வில்லிபுத்தூர்) இதன் ஒரு பகுதி மதுரை மாவட்டத்திலும் அமைந்துள்ளது.
- இது ஸ்ரீ வில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகின்றது.
Post Views:
1128