July 18 , 2023
497 days
322
- கும்பகோணம் அருகே உள்ள பழையாறை சோமநாதர் கோயிலின் சிதிலமடைந்தக் கோபுரமானது இந்து சமய அறநிலையத் துறையினால் (HR&CE) புதுப்பிக்கப்பட உள்ளது.
- காவிரியின் துணை நதியான திருமலைராஜன் ஆற்றின் கரையில் சோமநாதர் கோவில் அமைந்துள்ளது.
- பல தசாப்தங்களாகப் புறக்கணிக்கப்பட்டு, சிதிலமடைந்துக் காணப்படுவதால் இது ‘மொட்டை கோபுரம்’ என்ற பெயரினைப் பெற்றது.
- பழையாறை என்பது சோழர்களின் தலைநகராக இருந்ததற்குப் போதுமான சான்றுகள் உள்ளன.
- இது 5 ஆம் நூற்றாண்டு வரையிலும் தலைநகராக இருந்ததாக அறியப்படுகிறது.
- சோழர்களின் தலைநகர் ஆனது தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டதால் பழையாறை அதன் முக்கியத்துவத்தை இழந்தது.
- திருச்சியில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆனது கோபுரம் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள மண்ணை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
Post Views:
322