TNPSC Thervupettagam

பழைய இரும்பு காலப் புவியிட வட்டம்

November 15 , 2023 247 days 185 0
  • தெலுங்கானா மாநிலத்தின் மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் 3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் வட்ட வடிவிலான உள்ள பாறை வேலைப்பாடுகளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புவியிட வட்டம் ஆனது, 7.5 மீட்டர் விட்டம் மற்றும் முழு நிறைவான வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது.
  • இந்த வட்டத்தைச் சுற்றி 30-சென்டிமீட்டர் அகல விளிம்பு உள்ளதோடு மேலும் அந்த வட்டத்திற்குள் இரண்டு முக்கோணங்கள் உள்ளன.
  • இது தெலுங்கானாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட இத்தகைய வகையான முதல் வேலைப்பாடு ஆகும்.
  • இந்த ஆராய்ச்சிக் குழு பல பாறை வேலைப்பாடுகளை அடையாளம் கண்டுள்ளது.
  • அவை கிமு 4000 ஆம் ஆண்டிற்கு முந்தைய கற்காலத்தைச் சேர்ந்தவை என்று அவர்கள் நம்புகிறார்கள்.
  • இது புவியிட வட்டப் பகுதியிலிருந்து ஐந்து மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்