TNPSC Thervupettagam

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான குழு – தமிழ்நாடு

February 7 , 2025 16 days 72 0
  • தமிழக அரசானது, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு சார் ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக மூன்று பேர் கொண்ட குழுவினை அமைத்துள்ளது.
  • இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ககன்தீப் சிங் பேடி, சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் K.R. சண்முகம் ஆகியோர் இந்தக் குழுவின் சில உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இக்குழுவானது ஒன்பது மாதங்களுக்குள் பரிந்துரைகளுடன் கூடிய மிகவும் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்.
  • 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று அரசுப் பணியில் சேர்ந்த மாநில அரசு ஊழியர்களுக்குப் பங்களிப்பு சார் ஓய்வூதியத் திட்டம் (CPS) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 2004 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இருப்பினும், மாநில அரசு ஊழியர்களுக்கு CPS முறையே பின்பற்றப்பட்டது.
  • இந்த ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதியன்று மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்