TNPSC Thervupettagam

பழைய பாராளுமன்றக் கட்டிடம்

September 21 , 2023 305 days 220 0
  • பாராளுமன்ற நடவடிக்கைகள் சமீபத்தில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன.
  • பழைய பாராளுமன்றக் கட்டிடமானது "சம்விதான் சதன்" (அரசியலமைப்பு மாளிகை) என்று அழைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
  • பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட பழைய பாராளுமன்றக் கட்டிடமானது 1927 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
  • மத்திய சட்டப் பேரவை மேற்கொள்ளப்பட்ட பின்னர் மக்களவையாக மாற்றப்பட்ட அவையானது, முதலில் 3688 சதுர அடி பரப்பளவில் 148 இருக்கை அமைப்புடன் வடிவமைக்கப் பட்டது.
  • 1951-52 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அந்த அவை மறுசீரமைக்கப்பட்டது.
  • 450 இருக்கையினைக் கொண்டிருக்கும் வகையில் அவைத் தளம் 4804 சதுர அடியாக அதிகரிக்கப்பட்டது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையின் முதல் கூட்டம் ஆனது 1952 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதியன்று நடைபெற்றது.
  • சுதந்திரத்திற்குப் பிறகு, இளவரசர்கள் அவையானது 1958 ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தினால் பயன்படுத்தப்பட்டது.
  • பின்னர் அந்த அறை நூலகக் கூடமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.
  • இந்த பகுதியானது இன்றும் முந்தைய இந்திய சமஸ்தானங்களின் 102 சின்னங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்