மொத்தம் 2,050 மெகாவாட் திறன் கொண்ட முதல் நிலை சக்தி ஸ்தல சூரிய ஒளிப் பூங்காவானது தற்பொழுது கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பவகாடா பகுதியில் முழுமையாகச் செயல்பட்டு வருகின்றது.
இது உலகின் மிகப்பெரிய சூரிய பூங்கா என்று கூறப்படுகின்றது.
இந்தப் பூங்காவானது 2020 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் மத்திய அரசின் திட்டத்துடன் ஒன்றிணைகின்றது.
இந்தப் பூங்காவிற்காக நிலம் ஏதும் கையகப்படுத்தாமல், நிர்ணயிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் இது செயல்படுத்தப் பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது கர்நாடக சூரிய ஒளிப் பூங்கா மேம்பாட்டுக் கழக நிறுவனத்தினால் (Karnataka Solar Park Development Corporation Limited - KSPDCL) உருவாக்கப் பட்டுள்ளது. இது இந்திய சூரிய ஒளி ஆற்றல் கழகம் மற்றும் கர்நாடக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும்.