செய்ஷெல்ஸ் முழுவதும் உள்ள தொலைதூரப் பவளப்பாறைகள் ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் பரவியிருந்தாலும் நெருங்கிய தொடர்பு உடையவையாக உள்ளன.
பெருங்கடல் நீரோட்டங்கள் இந்த தொலைதூரத் தீவுகளுக்கு இடையில் லார்வாக்களை பரவச் செய்து ஒரு வகையான "பவளப்பாறைகளின் விரிவான அதிவேகத் தொடர்பு அமைப்புகளை" உருவாக்குகின்றன.
பவளப் பாறைகளை மீட்டெடுப்பதில் (புணரமைப்பதில்) லார்வாக்களின் இருப்பு ஒரு முக்கியக் காரணி என்பதால் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது ஆகும்.