TNPSC Thervupettagam

பவளப்பாறைகளுக்கான திருப்புமுனை திட்டம்

October 10 , 2023 284 days 256 0
  • சர்வதேச பவளப்பாறை முன்னெடுப்பு (ICRI) அமைப்பானது, பவளப்பாறைகளுக்கான உலகளாவிய நிதியம் (GFCR) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற உயர் மட்டப் பருவநிலை சாம்பியன்ஸ் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து பவளப் பாறைகளுக்கான திருப்புமுனை திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ICRI என்பது உலகின் 75 சதவீதத்திற்கும் அதிகமான பவளப்பாறைகளை கொண்டுள்ள 45 நாடுகளை உள்ளடக்கிய ஒரு வலையமைப்பாகும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் அரை பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தினை ஆதரிப்பதற்காக வேண்டி, குறைந்தது 125,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான ஆழமற்ற நீர்நிலைகளில் உள்ள வெப்பமண்டல பவளப்பாறைகளைப் பாதுகாப்பதற்காக குறைந்தபட்சம் 12 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை மேற்கொள்வதனை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பின்வரும் நான்கு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த உள்ளது:
    • இழப்பிற்கு இட்டுச் செல்லும் காரணிகளைத் தடுத்தல்,
    • பயனுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் பவளப்பாறைகளின் பரப்பளவை இரட்டிப்பாக்குதல்,
    • மறுசீரமைப்பு முயற்சிகளைத் துரிதப்படுத்துதல்,
    • 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 12 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளைப் பெறுதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்