புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் அதிகமான விரிவாக்கத்தினால் பவளப்பாறை முக்கோணப் பகுதி மீது ஏற்படும் கடுமையான ஆபத்துகளானது, உயிரியல் பன்முகத் தன்மைக்கான உடன்படிக்கையின் (CBD) 16வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP16) வெளியிடப் பட்ட அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் 'கடல்களின் அமேசான்' என்று குறிப்பிடப்படுகின்ற, பவளப் பாறை முக்கோணப் பகுதி ஆனது, சுமார் 10 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துக் காணப்படும் கடல் பகுதி ஆகும்.
இதில் இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தைமோர்-லெஸ்டே, சாலமன் தீவுகள் போன்ற நாடுகள் அடங்கும்.
இந்தப் பிராந்தியத்தில் உலகின் சுமார் 76 சதவீத பவளப்பாறை இனங்களையும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக இதன் வளங்களைச் சார்ந்துள்ள 120 மில்லியனுக்கும் அதிகமான மக்களையும் கொண்டுள்ளது.