TNPSC Thervupettagam

பவளப்பாறை முக்கோணப் பகுதி

November 6 , 2024 16 days 132 0
  • புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் அதிகமான விரிவாக்கத்தினால் பவளப்பாறை முக்கோணப் பகுதி மீது ஏற்படும் கடுமையான ஆபத்துகளானது, உயிரியல் பன்முகத் தன்மைக்கான உடன்படிக்கையின் (CBD) 16வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP16) வெளியிடப் பட்ட அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
  • பெரும்பாலும் 'கடல்களின் அமேசான்' என்று குறிப்பிடப்படுகின்ற, பவளப் பாறை முக்கோணப் பகுதி ஆனது, சுமார் 10 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துக் காணப்படும் கடல் பகுதி ஆகும்.
  • இதில் இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தைமோர்-லெஸ்டே, சாலமன் தீவுகள் போன்ற நாடுகள் அடங்கும்.
  • இந்தப் பிராந்தியத்தில் உலகின் சுமார் 76 சதவீத பவளப்பாறை இனங்களையும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக இதன் வளங்களைச் சார்ந்துள்ள 120 மில்லியனுக்கும் அதிகமான மக்களையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்