TNPSC Thervupettagam

பவளப் பாறைகளைப் பாதிக்கும் சன்ஸ்கிரீன் லோசன்களுக்குத் தடை – தாய்லாந்து

August 8 , 2021 1079 days 520 0
  • நாட்டின் அனைத்து கடல்சார் தேசியப் பூங்காக்களிலுள்ள பவளப் பாறைகளைப் பாதிப்புக்குள்ளாக்கும் வேதிப்பொருட்கள் அடங்கிய சன்ஸ்கிரீன் லோசன்களை உபயோகிக்க தாய்லாந்து அரசு தடை ஒன்றை விதித்துள்ளது.
  • சன்ஸ்கிரீன்களில் உள்ள 4 பொருட்கள் பவளப்பாறை லார்வாக்களை அழித்து, அவற்றின் இனப்பெருக்கத் தன்மையைத் தடுக்கின்றன எனவும், பவளப்பாறைகளில் வெளிர்தலை ஏற்படுத்துகின்றன எனவும் தாய்லாந்து வளங்காப்புத் துறை கூறுகிறது.
  • ஆக்சிபென்சோன், ஆக்டினாக்சேட், 4-மெத்தில் பென்சிலின் காம்பர் (கற்பூரம்) அல்லது பியூட்டைல்பாராபின் ஆகியவற்றைக் கொண்டுள்ள லோசன்களுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
  • இதே போன்று பசிபிக் தீவான பலாவு மற்றும் அமெரிக்கத் தீவான ஹவாய் ஆகியவற்றிலும் சன்ஸ்கிரீன் லோசன்களுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்