சமீபத்தில் இந்திய வெப்ப மண்டல வானிலையியல் மையமானது வட இந்தியப் பெருங்கடலில் உள்ள பவளப் பாறைகள் இந்தியப் பருவக் காற்றின் தொடக்கம் மற்றும் அந்த பருவக் காற்றின் திரும்பப் பெறல் ஆகியவற்றிற்கான தீர்வுகளைக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
பவளப் பாறைகள் மேற்பரப்பின் மீது வளர்ந்து வரும் பட்டைகள் பருவக்கால வரலாற்று நிலைகள், சுற்றுப்புற நீரின் வெப்பநிலை, மழை மற்றும் முன்பு இருந்த பல்வேறு பரிணாமங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த ஆய்வு கூறுகின்றது.
இது முந்தைய காலநிலை குறித்த தகவலைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் மர வளையத்தைப் போன்றதொரு ஒரு ஆய்வாகும்.