1,000 ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தைத் தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவுடன் இணைக்கும் ஒரு பெரிய வணிகப் பாதை ஒன்று இருந்தது.
ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் மூலம் இது தெரிய வந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பரப்புப் பகுதியில் இந்தக் கோயில் பெரும்பாலும் மூழ்கியே காணப்படுகிறது.
அணையின் நீர்மட்டமானது 105 அடி என்ற முழு கொள்ளளவில் இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 46 அடிக்கும் கீழாக குறைந்ததைத் தொடர்ந்து, இக்கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.
ஒவ்வொன்றும் பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 10 முதல் 15 கல்வெட்டுகள் இங்கு கண்டறியப் பட்டுள்ளன.
1,000 ஆண்டுகளுக்கு முன்னதாக தொண்டரீஷ்வரமுடையார் (சிவன்) கோயில் அமைந்திருந்த துறைவலூர் என்ற கிராமம் அங்கு இருந்தததையும் இது வெளிப்படுத்தி உள்ளது.
இப்பகுதி பெருவழியாக (பிரதான நெடுஞ்சாலை) செயல்பட்டது என்பதோடு இங்கு வணிகர்கள் கேரளாவின் வயநாடு மற்றும் கர்நாடகாவின் பல்வேறு இடங்களுக்குச் செல்ல பவானி நதி மற்றும் மோயாறு நதியைக் கடந்து சென்றனர்.
இப்பகுதி ஹொய்சாள ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது.
ஹொய்சாளப் பேரரசின் கடைசிப் பெரு மன்னன் மூன்றாம் வீர பல்லலா (1292-1342) இப்பகுதியை ஆட்சி செய்தார்.