TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் முதல் பெண் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி

July 28 , 2018 2216 days 675 0
  • பாகிஸ்தான் தலைமை நீதிபதியான சஹிப் நிசர், நீதிபதி தஹீரா சப்தர் –ஐ பலூசிஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார்.
  • இதன் மூலம் பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக ஒரு பெண்ணை நியமித்திருப்பது இதுவே முதன் முறையாகும்.
  • பலூசிஸ்தானில் 1982-ல் முதல் பெண் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று இவர் வரலாறு படைத்தார்.
  • தற்பொழுது நீதிபதி தஹீரா தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப்  வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளில்  ஒருவர் ஆவார். முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் 2007 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று நாட்டில் அவசர நிலையை அறிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்