TNPSC Thervupettagam

பாகிஸ்தானுக்கு போலியோ மருந்துக் குறிப்பான்கள்

December 27 , 2019 1703 days 637 0
  • இந்தியாவில் இருந்து போலியோ மருந்துக் குறிப்பான்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு சமீபத்தில் முடிவு செய்துள்ளது.
  • இந்தியா 370வது பிரிவை ரத்து செய்த பின்னர், புது தில்லியுடனான இந்த மருந்து குறிப்பான்கள் மீதான வர்த்தகத்தை பாகிஸ்தான் அரசு பல மாதங்களுக்கு நிறுத்தி வைத்து இருந்தது.

போலியோ குறிப்பான்கள்

  • உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப் பட்ட தடுப்பூசிகளைக் கொண்டு தடுப்பூசி போடப்பட்ட பின்னர், குழந்தைகளின் விரல்களில் குறிப்பதற்காக போலியோ மருந்துக் குறிப்பான்கள் பயன்படுத்தப் படுகின்றன.

போலியோ பற்றி

  • இந்த நோயானது போலியோ வைரஸால் ஏற்படுகின்றது.
  • 1995 ஆம் ஆண்டில், இந்தியா WHOன் உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சியைத் தொடங்கியது. இது 100% போலியோ ஒழிப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தப் பட்டதன் மூலம் போலியோவை இந்தியா முற்றிலுமாக ஒழித்துள்ளது.
  • இந்தியாவில் போலியோ நோய் பாதிப்பானது கடைசியாக 2011 ஆம் ஆண்டில் பதிவாகியது.
  • உலகில் போலியோ நோய் பாதிப்புகள் இன்னமும் மூன்று நாடுகளில் காணப் படுகின்றன.
  • அந்த நாடுகளாவன: பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்