லாகூரிலிருந்து சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் காஸ்கர் நகரத்திற்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்லும் அதிநவீன பேருந்து சேவை ஒன்றை பாகிஸ்தானும் சீனாவும் ஆரம்பித்திருக்கின்றன.
காஷ்மீரை நோக்கிய பேருந்து தனது முதல் பயணத்தை 2018 ஆம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதியன்று லாகூரில் உள்ள குல்பெர்க் என்ற இடத்திலிருந்து ஆரம்பித்தது.
இது 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய சீனா-பாகிஸ்தான் பொருளாதார பெருவழிப் பாதையின் கீழ் இரு நாடுகளையும் சாலை வழியாக இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.