TNPSC Thervupettagam

பாகிஸ்தான் நாட்டிற்கு நிதி வசதி விரிவாக்கம்

August 4 , 2022 719 days 330 0
  • சர்வதேச நாணய நிதியமானது, பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தினை மறு சீரமைப்பதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்துடன் நிதி விரிவாக்க வசதி ஒப்பந்தத்தில் (EFF) கையெழுத்திட்டது.
  • பாகிஸ்தான் நாட்டின் 2022 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2022 ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 18.6 பில்லியன் டாலராக உள்ளது.
  • 252 பில்லியன் டாலராக உள்ள நிகர பொதுக் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 66.3% ஆகும்.

நிதி விரிவாக்க வசதி

  • இது நீண்ட காலமாக இருக்கும் கட்டமைப்பு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்ய தேவையான கொள்கைகள் உட்பட விரிவான திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.
  • நிதி விரிவாக்க வசதியின் ஈடுபாடு மற்றும் மறு வழங்கீடு ஆகியவை பெரும்பாலான நிதி வசதிகளை விட நீண்ட காலம் வரை நிதி உதவி வழங்குகிறது.
  • 3 முதல் 4 ஆண்டுகள் வரை நிதி வழங்கப்படுகிறது.
  • நிதி விரிவாக்க வசதியின் கீழ் பெறப்பட்டத் தொகைகள் 5  முதல் 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்