11வது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம் ஆனது பிரேசிலின் பிரேசிலியா என்ற நகரில் நடைபெற்றது.
'பாகு முதல் பெலெம் வரை எனும் ஒரு செயல்திட்டத்தில்' பிரிக்ஸ் நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.
உலக மக்கள்தொகையில் 47% மற்றும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (PPP) 36% பங்கினை பிரிக்ஸ் நாடுகள் கொண்டுள்ளன.
தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளுக்கு (NDCs) ஆதரவளிப்பதற்காக பருவ நிலை நிதியில் 1.3 டிரில்லியன் டாலர் நிதியினைப் பெறுவதை ஒரு நோக்கமாகக் கொண்ட பாகு முதல் பெலெம் வரை - செயல் திட்டத்தில் முக்கியக் கவனம் செலுத்தப் பட்டது.
பருவநிலை நிதிக்கான புதியக் கூட்டு அளவீட்டு இலக்கின் கீழ் 2035 ஆம் ஆண்டிற்குள் திரட்டப்பட வேண்டியதாக முன்மொழியப்பட்ட வருடாந்திர 300 பில்லியன் டாலர்கள் இலக்கானது 1.3 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை விட கணிசமாகக் குறைவாகும்.