TNPSC Thervupettagam

பாக்டீரியாவில் ஏன் வைரஸ் தொற்று இல்லை? - மூலக்கூறு கத்தரி

August 28 , 2019 1790 days 502 0
  • போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER - Indian Institute of Science Education and Research) விஞ்ஞானிகள் “McrBC” இன் அணுக் கட்டமைப்பை தீர்மானித்துள்ளனர்.
  • McrBC ஒரு பாக்டீரிய புரதம் ஆகும்.
  • இது ஒரு மூலக்கூறு கத்தரியாகச் செயல்படுகின்றது. இது பாக்டீரியாவில் வைரஸ் தொற்றுகளைத் தடுக்கின்றது.
  • இது எலக்ட்ரான் “கிரையோ மைக்ரோஸ்கோபி” ஐப் பயன்படுத்தித் தீர்மானிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து உயர் தெளிவு திறன் கொண்ட கட்டமைப்பின் முதல் அறிக்கையாகும். இது பொதுவாக கிரையோ- EM  என அழைக்கப்படும்.

நடைமுறைப் பயன்பாடு
  • McrBC இன் கட்டமைப்பை நிர்ணயிப்பது “உண்ணிச் சிகிச்சையில்” நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளது. இது எதிர்காலத்தில் மருந்து எதிர்ப்புத் தொற்று நோய்களை  எதிர்த்துப் போராட உதவும்.
  • உண்ணிகள் என்பது பாக்டீரியா செல்களைப் பாதித்து மற்றும் அவற்றைக் கொல்லும் வைரஸ்களின் குழுக்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்