பாங்க் ஆஃப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் இந்தியா நிறுவனத்தின் அறிக்கை
August 28 , 2022 821 days 478 0
இரயில் பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்தச் செய்வதற்கான உலக நாடுகளின் அனைத்துச் சாதனைகளையும் முறியடிக்கும் பயணத்தில் இந்தியா உள்ளது.
1950 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஒட்டு மொத்தமாக கட்டமைக்கப் பட்டதை விட 2025 ஆம் ஆண்டில், இந்திய அரசு அதிக அளவில் நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில் பாதைகளைக் கட்டமைக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 1.2 லட்சம் கிமீ தூர இரயில் பாதைகளையும் 1.8 லட்சம் கிமீ தூர நெடுஞ்சாலைகளையும் கட்டமைத்திருக்கும் என்று மதிப்பிடப் படுகிறது.
1950 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்திய அரசு 4,000 கிலோமீட்டர் தொலைவு வரை தேசிய நெடுஞ்சாலைகளை மட்டுமே உருவாக்கியது.
இது 2015 ஆம் ஆண்டில் மொத்தம் 77,000 கிலோமீட்டர் என்ற அளவில் நெடுஞ்சாலை அமைப்பினைக் கட்டமைத்தது.
இருப்பினும், 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலையின் நீளம் ஆனது பத்து ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட சாலை நீளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக 1.8 லட்சம் கிலோ மீட்டர்களைக் கடக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டில் இந்தியாவில் 10,000 கிலோமீட்டர் இரயில் பாதைகள் மட்டுமே இருந்தது.
இது 2015 ஆம் ஆண்டில் 63,000 கிலோ மீட்டராக அதிகரித்தது.
ஆனால் இது 2025 ஆம் ஆண்டில் 1.2 லட்சம் கிலோமீட்டரைத் தொடும் என எதிர் பார்க்கப் படுகிறது.
1995 ஆம் ஆண்டில் 777 MTPA ஆக இருந்த துறைமுகச் சரக்கு கையாளும் திறன் ஆனது 2015 ஆம் ஆண்டில் 1,911 MTPA ஆக உயர்ந்துள்ளது.
இது 2025 ஆம் ஆண்டில் 3,000 MTPA என்ற அளவில் இருமடங்கிற்கும் அதிகமாக உயரும் என மதிப்பிடப் பட்டுள்ளது.