சமீபத்தில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான ஒரு குறைந்தபட்ச விலையை முற்றிலுமாக நீக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் 27, 2023 அன்று டன்னுக்கு 1,200 அமெரிக்க டாலருக்கும் குறைவாக பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதில்லை என அரசாங்கம் முடிவு செய்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை ஒரு டன்னுக்கு 1,200 அமெரிக்க டாலரில் இருந்து 950 அமெரிக்க டாலராக அரசாங்கம் குறைத்தது.
இந்தியாவின் மொத்தப் பாசுமதி அரிசி ஏற்றுமதியானது 2022-23 ஆம் ஆண்டில் விலை அடிப்படையில் 4.8 பில்லியன் அமெரிக்க டாலராகவும் அளவு அடிப்படையில் அது 45.6 லட்சம் டன்னாகவும் இருந்தது.