TNPSC Thervupettagam
May 8 , 2019 2030 days 760 0
  • செயற்கைச் சூழலில் வைத்து வளர்க்கப்பட்ட கடைசியான ஒரு வெள்ளைப் புலியானது மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் சமீபத்தில் இறந்தது.
  • வெள்ளைப் புலியானது புலிகளின் ஒரு தனித்த துணை இனங்கள் அல்ல.
  • இந்தப் புலிகள் பின்வரும் காரணங்களினால் வெள்ளையாக இருக்கின்றன.
    • சிவப்பு அல்லது மஞ்சள் நிறமுடைய “பியோமெலனைன்” என்ற நிறமி குறைவாக இருத்தல்.
    • தனித்துவ ஒடுங்கு மரபணுக்கள் காணப்படுதல்.
  • தற்பொழுது இயற்கை வாழிடங்களில் வெள்ளைப் புலி இனங்கள் இல்லை.
  • வெள்ளைப் புலியானது மத்தியப் பிரதேசத்தின் ரேவா வனப் பகுதியில் கடைசியாக இயற்கையான முறையில் காணப்பட்டது.
சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா
  • மும்பைத் தலைநகர் பகுதிக்குள் தற்பொழுது அமைந்திருக்கும் முக்கியமான தேசியப் பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும்.
  • இந்தப் பூங்காவானது பாறைக் குன்றுகளிலிருந்து செதுக்கப்பட்ட 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கன்ஹேரி குகைகளைக் கொண்டுள்ளது.
  • இந்த இடமானது மிக முக்கியமான புத்த மதக் கல்வி மையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்