TNPSC Thervupettagam

பாட்னா பிரகடனம்

February 9 , 2024 161 days 290 0
  • சமீபத்தில் பீகார் தலைநகரில் மூன்று நாட்கள் அளவிலான சர்வதேச பயிலரங்கம் நடைபெற்றது.
  • இது வன மற்றும் வலசைப் பறவைகளை சட்டவிரோதமாக வேட்டையாடுவதைத் தடுப்பதையும், மத்திய ஆசிய வலசைப் போக்கு வழித்தடத்தில் (CAF) உள்ள நாடுகளில் அவற்றின் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பயிலரங்கில் பீகார் அரசானது, 'பாட்னா பிரகடனத்தை' முன் வைத்தது.
  • மத்திய ஆசிய வலசைப் போக்கு வழித்தடத்தில் பயணிக்கும் பறவைகளைப் பாதுகாப்பதற்காக அந்த மாநிலத்தின் செயல் திட்டத்தைப் பற்றி இந்தப் பிரகடனம் கூறுகிறது.
  • CAF பிராந்தியத்தில் பறவைகளை சட்டவிரோதமாக வேட்டையாடுதல், கைப்பற்றிச் செல்வது மற்றும் வர்த்தகம் செய்வதைத் தடுப்பதற்கான பல்வேறு உத்திகள் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்