பூமியின் மிகப்பெரிய வெப்பமண்டல ஈரநிலமான பிரேசிலின் பாண்டனல் சதுப்பு நிலத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தீ விபத்தானது, 2020 ஆம் ஆண்டில் பதிவான மோசமான தீ விபத்தினையே விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பராகுவே நதிப் படுகையில் உயர்ந்த பகுதிகளில் அமைந்துள்ளது.
பிரேசிலில் அமைந்துள்ள பாண்டனல், பொலிவியா மற்றும் பராகுவே ஆகியவற்றுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
போர்ச்சுகலை விட சுமார் இரண்டு மடங்கு பெரியப் பரப்பளவைக் கொண்ட இந்த யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளம் ஆனது, ஜாகுவார் உயிரினங்களைக் அதிக எண்ணிக்கையில் கொண்ட உலகின் மிகப்பெரியப் பகுதியாகும்.
பாண்டனல் பகுதியில் சுமார் 95% ஆனது தனியார் உரிமையின் கீழ் உள்ளது.