TNPSC Thervupettagam

பாண்டாக்களைப் பரிசாக வழங்கும் கொள்கையின் மறுமதிப்பீடு

March 5 , 2024 265 days 233 0
  • பாண்டா வளங்காப்பு தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள இரண்டு உயிரியல் பூங்காக்களுடன் சீனா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • விரைவில் ஒரு ஜோடி பாண்டாக்கள் அமெரிக்க உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட உள்ளன.
  • இது 'பாண்டாக்களை பரிசாக வழங்கும் அரசு முறைக் கொள்கை' முறையை மீண்டும் தொடங்குவதாக கருதப்படுகிறது.
  • பாண்டாக்கள் சீனாவை பூர்வீகமாகக் கொண்டவை என்ற நிலையில், தற்போது அவை காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
  • 1957 முதல் 1982 ஆம் ஆண்டு வரை, சோவியத் ஒன்றியம், வட கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ ஆகிய ஒன்பது நாடுகளுக்கு மொத்தம் 23 பெரிய பாண்டாக் கரடிகளை சீனா பரிசாக வழங்கியுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில், IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் பாண்டாக்களுக்கான அச்சுறுத்தல் நிலை "அருகி வரும் இனம்" என்ற நிலையில் இருந்து "எளிதில் பாதிக்கப் படக் கூடிய இனம்" என்று குறைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்