இந்த ஆண்டு ஆனது 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 முதல் 24 ஆம் தேதி வரையில் இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் நடைபெற்ற முதல் ஆசிய-ஆப்பிரிக்க உச்சி மாநாட்டின் 70 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் சுமார் 29 அரசாங்கங்களின் பிரதிநிதிகள் இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் கூடியிருந்தனர்.
அவர்கள் அமைதி மற்றும் பனிப்போர், பொருளாதார வளர்ச்சி மற்றும் காலனித்துவ நீக்கத்தில் வளர்ந்து வரும் நாடுகளின் பங்கு குறித்து விவாதித்தனர்.
இதற்கு இந்தோனேசியா, மியான்மர், இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் துணைப் பங்காளர்களாக இருந்தன.
இந்த மாநாடு மற்றும் அதன் இறுதித் தீர்மானம் ஆனது பனிப்போரின் போதான அணி சேரா இயக்கத்திற்கான அடித்தளத்தினை அமைத்தன.
அணிசேரா இயக்கமானது சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஆன பனிப்போரின் பின்னணியில் 1961 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
அணிசேரா இயக்கத்திற்கு முறையான ஸ்தாபன சாசனம் அல்லது ஒப்பந்தம் இல்லை, மேலும் அதற்கு நிரந்தரச் செயலகமும் இல்லை.