TNPSC Thervupettagam

பாதரச அளவுகள்

April 12 , 2019 2056 days 720 0
  • அண்ணாப் பல்கலைக் கழகத்தின் கடல் மேலாண்மைக்கான நிறுவனமானது (Institute for Ocean Management - IOM) சென்னையில் வாயு நிலையிலுள்ள பாதரசத்தின் அளவானது 3.5 நானோ கிராம் /மீ3 என்பதிலிருந்து 8.5 நானோ கிராம் /மீ3 வரையிலான அளவில் உள்ளதாகக் கண்டறிந்துள்ளது.
  • வளிமண்டலத்தில் வாயு நிலையிலுள்ள பாதரசத்தின் சர்வதேசச் சராசரி அளவானது 1.5 நானோ கிராம் /மீ3 ஆகும்.
  • தொழிற்சாலை மாசுபாட்டைத் தவிர, பாதரசத்தின் மிகப் பெரிய இயற்கை இருப்பான கடலுக்கு அருகில் உள்ள பாதரசமானது நகரத்தில் காற்றில் வாயு நிலையிலுள்ள பாதரசத்தின் அதிக அளவிற்குக் காரணம் என்று சந்தேகிக்கப் படுகின்றது.
  • மாசுபாட்டு அளவானது காலை 3 மணி முதல் காலை 8 மணி வரை அதிகமாகவும் குளிர் காலத்தை விடக் கோடைக் காலத்தில் அதிகமாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்