மேற்கு வங்க மாநில அரசானது “பாதஸ்ரீ அபிஜன்” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது ஒரு சாலை பழுதுபார்ப்புத் திட்டமாகும். இதில் மாநிலம் முழுவதும் 12,000 கிலோ மீட்டர் வரையுள்ள 7000 சாலைகள் திட்ட அடிப்படையிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் பழுது பார்க்கப்பட உள்ளன.
இந்தச் சாலைகளின் பட்டியலைத் தயாரிப்பதற்காக அம்மாநில மக்கள் அம்மாநில அரசின் “டிடி கெ போலோ” என்ற முன்னெடுப்பின் மூலம் முதலமைச்சருக்கு அறிவிக்க உள்ளனர்.