தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் முடிமாணிக்யம் கிராமத்தில் சுமார் 1,300-1,500 ஆண்டுகள் பழமையான இரண்டு பாதாமி சாளுக்கியக் கோயில்களும், 1,200 ஆண்டுகள் பழமையான முத்திரைக் கல்வெட்டும் சமீபத்தில் கண்டறியப்பட்டன.
இந்த இரண்டு கோயில்களும் கி.பி.543 முதல் கி.பி.750 ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை ஆகும்.
இந்தக் கல்வெட்டு ஆனது பாதாமி சாளுக்கியர்களின் ஆட்சியுடன் தொடர்புடைய கி.பி 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கோயில்கள் ரேகா நாகரா வடிவத்தில் கடம்ப நகர பாணியில் இருப்பதால் தனிச் சிறப்பு வாய்ந்தவையாகும்.
இன்று தெலுங்கானாவில் இத்தகையக் கட்டிடக்கலைக்கு இதுவே ஒரே உதாரணமாக விளங்குகிறது.
‘கண்டலோரன்று’ என எழுதப்பட்டுள்ள இந்த முத்திரைக் கல்வெட்டானது கிராமத்தில் உள்ள ஐந்து கோயில்களை உள்ளடக்கிய குழுவின் தூண்களில் பொறிக்கப் பட்டுள்ளது.