TNPSC Thervupettagam

பாதிப்படையக் கூடும் பாலினத்தவர் குறியீடு

November 2 , 2017 2578 days 862 0
  • பிளான் இந்தியா எனும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான அரசு சாரா தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள பாதிப்படையக் கூடும் பாலினத்தவர் குறியீட்டின் படி (Gender Vulnerability Index) கோவா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் இடம் பிடித்துள்ளன.
  • வன்முறைகளுக்கு எதிரான பாதுகாப்பு கல்வி, சுகாதாரம், வறுமை போன்ற பெண் குழந்தைகளின் நிலையோடு தொடர்புடைய 4 முக்கிய அம்சங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் தர வரிசைப்படுத்த இந்தக் குறியீடு கணக்கிடப்படுகிறது.
  • வேறுபட்ட சூழ்நிலைகளில் குழந்தைகளை பாதிக்கும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாதிக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளின் பரிமாணங்களை விரிவான முறையில் புரிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இத்தொண்டு நிறுவனத்தின் அனைத்து குழந்தைகளுக்கான பிரச்சார திட்டத்தின் ஆராய்ச்சிப் படி இக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
  • முதலிடம் பிடித்த கோவாவை அடுத்து கேரளா, மிசோரம், சிக்கிம் போன்ற மாநிலங்கள் உள்ளன. 30வதாக கடைசி இடத்தில் பீகாரும், 29 இடத்தில் புதுதில்லியும், 28 இடத்தில் உத்திரப்பிரதேசமும் உள்ளன.
  • வட இந்திய மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசம் மட்டுமே 6 வது இடத்தைப் பெற்று உயர்ந்த தர வரிசையைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்