TNPSC Thervupettagam

பாதுகாக்கப்பட்டப் பகுதி நிலை 2024

December 23 , 2024 4 days 57 0
  • வெளிநாட்டினரின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக மணிப்பூர், நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகிய சில மாநிலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதி முறையை (PAR) மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் அமல்படுத்தியுள்ளது.
  • இம்மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்லும் வெளிநாட்டினர் அரசாங்கத்திடம் முன் அனுமதி மற்றும் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
  • அவர்கள் 1958 ஆம் ஆண்டு வெளிநாட்டினர் (பாதுகாக்கப்பட்ட பகுதிகள்) ஆணையின் படி அவசியமான பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதிகளை (PAP) பெற வேண்டும்.
  • 14 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு இந்த முறையானது திரும்பக் கொண்டு வரப் பட்டு உள்ளது.
  • மியான்மரின் எல்லையில் உள்ள இம்மூன்று மாநிலங்களில் 2010 ஆம் ஆண்டில் PAR முதலில் ஓராண்டிற்கு தளர்த்தப்பட்டது, பின்னர் இந்த உத்தரவின் செல்லுபடி காலம் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட சமீபத்திய PAR உத்தரவு ஆனது, 2027 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை செல்லுபடியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்