TNPSC Thervupettagam

பாதுகாக்கப்பட்ட ஈரநிலங்கள்

April 6 , 2021 1204 days 670 0
  • ஸ்ரீ நகரிலுள்ள தால் ஏரி மற்றும் ஜம்மு & காஷ்மீரில் உள்ள இதர ஐந்து ஏரிகள், பாதுகாக்கப்பட்ட ஈரநிலங்களாக அறிவிக்கப்பட உள்ளன.
  • காஷ்மீர் பகுதியிலுள்ள வுலார், தால், நைகீன் ஏரி ஆகியவை மற்றும் ஜம்மு பகுதியிலுள்ள சனாசர், மனாஸ்பல் மற்றும் பூர்மண்டல் ஏரி ஆகியவை பாதுகாக்கப்பட்ட ஈரநிலங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
  • பூர்மண்டல் ஏரி சோட்டா காசி எனவும் அழைக்கப்படுகிறது.
  • ஜம்மு & காஷ்மீர் தலைமைச் செயலாளர் தலைமையிலமைந்த ஜம்மு & காஷ்மீர் ஈரநில ஆணையத்தின் சந்திப்பின் போது இம்முடிவானது மேற்கொள்ளப்பட்டது.
  • ஜம்மு & காஷ்மீரில் வெவ்வேறு ஈரநிலங்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து,
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986 மற்றும்
  • ஈரநிலம் (பாதுகாப்பு & மேலாண்மை) விதிகள் ஆகியவற்றின் கீழ்
  • அவற்றைக் கொண்டு வருவதற்கான ஒரு பரிந்துரையை வழங்குமாறு அதன் தலைமைச் செயலாளர் அதன் வனத்துறைக்கு ஆணையிட்டு உள்ளார்.
  • அம்மாநில வனத்துறையானது ஈரநிலங்கள் பற்றிய புவிசார்ந்த தரவுகளின் டிஜிட்டல் விவரங்களைத் தயாரித்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் உருவாக்குதல் போன்றவற்றிற்கான ஒரு முதன்மை துறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்