TNPSC Thervupettagam

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான அனுமதி விதிகள்

April 6 , 2018 2298 days 647 0
  • மத்திய உள்துறை அமைச்சகம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எல்லைப் பகுதிகளை எளிதில் கடந்து வரும் வகையில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான அனுமதி விதிகளை இலகுவாக்கிட திட்டம் தீட்டி வருகின்றது.
  • இந்த முயற்சி மாநிலங்களுக்கு வருவாயைப் பெருக்கிடவும், உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி சுற்றுலாத் துறையை மேம்படுத்திடவும் உதவும்.
  • மத்திய உள்துறை அமைச்சகம், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான அனுமதி விதிமுறைகளை தளர்த்திட அதற்கு ஏதுவான தளங்களை அடையாளம் காண மாநில அரசுகளுடனும் மற்ற நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படும்.
  • ஆனாலும், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு இந்த விதிமுறைத் தளர்வுகள் அளிக்கப்பட மாட்டாது.
  • 1958 வெளிநாட்டவர்கள் [பாதுகாக்கப்பட்ட பகுதிகள்] ஆணையின்படி, சில மாநிலங்களில் உட்புற எல்லைக்கும், சர்வதேச எல்லைக்கும் இடையில் இருக்கும் அனைத்து பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • தற்சமயம் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் முழுமையாகவும், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளிலும் உள்ளன.
  • சிக்கிமின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதி விதிமுறையின் கீழும் சில பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதி விதிமுறையின் கீழும் வருகின்றன.
  • டிசம்பர், 2010ம் ஆண்டின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜனவரி 2011ம் ஆண்டிலிருந்து ஒரு வருட காலத்திற்கு மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதி விதிமுறைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டன.
  • ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட குடிமக்கள் இந்த பகுதிகளில் உள்ளே நுழைவதற்கு அனுமதி கிடையாது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்