TNPSC Thervupettagam

பாதுகாக்கப்பட்ட புவிக் கிரகம் அறிக்கை 2024

November 4 , 2024 25 days 105 0
  • 2024 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட புவிக் கிரக அறிக்கையானது 16வது பங்குதாரர்கள் (COP16) மாநாட்டின் போது வெளியிடப்பட்டது.
  • பாதுகாக்கப்பட்ட மற்றும் வளங்காப்புப் பகுதிகளின் உலகளாவிய ஒரு பரவல் ஆனது தற்போது 17.6 சதவீத நிலப்பரப்பு மற்றும் உள்நாட்டு நீர் நிலைகள் மற்றும் 8.4 சதவீத கடல் மற்றும் கடலோரப் பகுதிகள் என்ற அளவினை எட்டியுள்ளது.
  • இதில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு இலக்கை அடைய 2030 ஆம் ஆண்டில் நிலப்பரப்பிலான பாதுகாப்பினை இரட்டிப்பாக்க வேண்டும் மற்றும் கடல் பகுதிகளில் அதனை மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டும்.
  • 16.64 சதவீத நிலம் மற்றும் உள்நாட்டு நீர்நிலைச் சுற்றுச்சூழல் அமைப்புகளும், 7.74 சதவீதக் கடலோர நீர் மற்றும் பெருங்கடலும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
  • இதில் 51 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் நிலப்பரப்பிலான பாதுகாப்பில் சுமார் 30 சதவீத இலக்கினையும், 31 நாடுகள் கடல் பரப்பு சார் பாதுகாப்பில் சுமார் 30 சதவீத இலக்கையும் தாண்டியுள்ளன.
  • இதேபோல், நான்கில் ஒரு பகுதி சுற்றுச்சூழல் பகுதிகள் மட்டுமே 30 சதவீதத்திற்கும் அதிகமானப் பாதுகாப்பைக் கொண்டுள்ளன.
  • கடல் சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் பொறுத்தவரை, பெருங்கடலின் 2.8 சதவீதம் மட்டுமே முழுமையாக அல்லது மிகவும் பாதுகாக்கப்பட்ட கடல் சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.
  • பாதுகாக்கப்பட்ட மற்றும் வளங்காப்பு பகுதிகளில் சுமார் 3.95 சதவிகிதம் மட்டுமே பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களால் (IPLC) நிர்வகிக்கப்படுகின்றன.
  • 11.84 சதவீதம் மட்டுமே பகிரப்பட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்