2024 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட புவிக் கிரக அறிக்கையானது 16வது பங்குதாரர்கள் (COP16) மாநாட்டின் போது வெளியிடப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட மற்றும் வளங்காப்புப் பகுதிகளின் உலகளாவிய ஒரு பரவல் ஆனது தற்போது 17.6 சதவீத நிலப்பரப்பு மற்றும் உள்நாட்டு நீர் நிலைகள் மற்றும் 8.4 சதவீத கடல் மற்றும் கடலோரப் பகுதிகள் என்ற அளவினை எட்டியுள்ளது.
இதில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு இலக்கை அடைய 2030 ஆம் ஆண்டில் நிலப்பரப்பிலான பாதுகாப்பினை இரட்டிப்பாக்க வேண்டும் மற்றும் கடல் பகுதிகளில் அதனை மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டும்.
16.64 சதவீத நிலம் மற்றும் உள்நாட்டு நீர்நிலைச் சுற்றுச்சூழல் அமைப்புகளும், 7.74 சதவீதக் கடலோர நீர் மற்றும் பெருங்கடலும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இதில் 51 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் நிலப்பரப்பிலான பாதுகாப்பில் சுமார் 30 சதவீத இலக்கினையும், 31 நாடுகள் கடல் பரப்பு சார் பாதுகாப்பில் சுமார் 30 சதவீத இலக்கையும் தாண்டியுள்ளன.
இதேபோல், நான்கில் ஒரு பகுதி சுற்றுச்சூழல் பகுதிகள் மட்டுமே 30 சதவீதத்திற்கும் அதிகமானப் பாதுகாப்பைக் கொண்டுள்ளன.
கடல் சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் பொறுத்தவரை, பெருங்கடலின் 2.8 சதவீதம் மட்டுமே முழுமையாக அல்லது மிகவும் பாதுகாக்கப்பட்ட கடல் சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.
பாதுகாக்கப்பட்ட மற்றும் வளங்காப்பு பகுதிகளில் சுமார் 3.95 சதவிகிதம் மட்டுமே பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களால் (IPLC) நிர்வகிக்கப்படுகின்றன.
11.84 சதவீதம் மட்டுமே பகிரப்பட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளன.