புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தினைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இணைப்பதற்கான மசோதாவினை தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இது 'வேளாண்மை' என்ற சொல்லின் பொருள் வரம்பிற்குள் 'கால்நடை வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு' ஆகியவற்றையும் சேர்த்துள்ளது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களையும், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்காக 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தினை மாநில அரசு இயற்றியது.