TNPSC Thervupettagam

பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினம் – ஏப்ரல் 11

April 14 , 2020 1689 days 448 0
  • இது பெண்களுக்கான சரியான சுகாதார நலம் மற்றும் கர்ப்பிணி & பாலூட்டும் தாய்மார்களுக்கான மகப்பேறு வசதிகள் ஆகியவை குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • இது இந்திய வெள்ளை நாடாக் கூட்டிணைவின் (WRAI -   White Ribbon Alliance India) ஒரு முன்னெடுப்பாகும்.
  • 2003 ஆம் ஆண்டில் இந்திய அரசானது ஏப்ரல் 11 ஆம் தேதியை பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய  தினமாக அறிவித்தது.
  • சமூக அளவில் பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினத்தைக் கொண்ட உலகின் முதலாவது நாடு இந்தியா ஆகும். 
  • குழந்தைப் பிறப்பில் மிகவும் அபாயமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உலக அளவில் மொத்த தாய்மார்கள் இறப்பில் 15% இறப்புகள் இங்கு நிகழ்கின்றன.
  • கஸ்தூரிபா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
  • கஸ்தூரிபா காந்தி நமது தேசத் தந்தையான மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியின் மனைவி ஆவார். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்