பொருளாதார வல்லுனர்களுக்கான பாதுகாப்பான நகரங்களின் குறியீட்டில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
இந்திய நகரங்களான டெல்லி மற்றும் மும்பை முறையே 43 மற்றும் 45 ஆவது இடத்தைப் பிடித்துள்ளன.
NEC எனும் ஜப்பானின் பன்னாட்டு நிறுவன ஆதரவுடன் பொருளாதார நிபுணர்களின் நுண்ணறிவுப் பிரிவு (Economist Intelligence Unit) இந்தக் குறியீட்டை வெளியிடுகிறது.
டிஜிட்டல் பாதுகாப்பு , ஆரோக்கிய பாதுகாப்பு , உள்கட்டமைப்புப் பாதுகாப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு போன்ற அளவுருக்களின் அடிப்படையில் இக்குறியீடு கணக்கிடப்படுகிறது.