TNPSC Thervupettagam

பாதுகாப்பான நாடுகளின் பட்டியல்

November 14 , 2023 377 days 244 0
  • ஐக்கியப் பேரரசு அரசாங்கம் ஆனது, இந்தியா மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளை தனது விரிவாக்கப்பட்ட பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சேர்க்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது.
  • இது நாட்டின் குடியேற்ற அமைப்பை நன்கு வலுப்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டதோடு மேலும் ஆதாரமற்றப் பாதுகாப்பு உரிமைக் கோரல்களை முன் வைக்கும் மக்களால் மேற்கொள்ளப்படும் மோசடிகளைத் தடுக்க உதவுகிறது.
  • சட்டவிரோதமாக நாட்டிலிருந்து பயணம் செய்யும் இந்தியர்களைத் திருப்பி அனுப்பும் செயல்முறையை இது மேலும் துரிதப்படுத்துவதோடு, அவர்கள் பிரிட்டனில் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்பினையும் ரத்து செய்யும்.
  • அல்பெனியா, சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் (European Union) மற்றும் ஐரோப்பிய பொருளாதாரப்  பகுதி (EEA) ஆகிய நாடுகள் ஐக்கியப் பேரரசினால் பாதுகாப்பானதாகக் கருதப் படும் பிற நாடுகளாகும்.
  • இந்த விதியின் கீழ், ஐக்கியப் பேரரசு ஆனது அங்கு சட்டவிரோதமாக குடியேறிய நபர்களை தடுப்பு காவலில் வைக்கலாம் அல்லது பாதுகாப்பான மற்றொரு நாட்டிற்கு அல்லது அவர்களின் சொந்த நாட்டிற்கு உடனடியாக திரும்ப உத்தரவிடலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்