புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக C கந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலைக் குழுவானது ஆயுதப்படைகளின் செயல்பாட்டுத் தயார் நிலையை மதிப்பிடல், போர்திறஞ் சார்ந்த பாதுகாப்பு அமைப்புகள் சம்பந்தப்பட்ட விபத்துகளை ஆய்வு செய்தல், பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான கொள்முதல் கொள்கைகளை மதிப்பிடல், ஆயுதப்படைகளுக்கு வழங்கப்படும் குறிப்பாக எல்லைப் பகுதியில் பணிபுரியும் படைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
நாடாளுமன்ற நிலைக்குழுக்கள்
நாடாளுமன்றத்தில் 24 நிலைக் குழுக்கள் உள்ளன. அனைத்து நிலைக்குழுக்களும் 31 உறுப்பினர்களை உடையது. அவற்றில் ஒவ்வொன்றிலும் மக்களவையிலிருந்து 21 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 10 உறுப்பினர்களும் அமைவர்.
நாடாளுமன்றத்திற்கு, மத்திய அமைச்சர்கள் போன்ற நிர்வாகிகளின் பொறுப்புடைமையை குறிப்பாக நிதியியல் பொறுப்புடைமையை உத்திரவாதப்படுத்துவதே இந்த நிலைக்குழுக்களின் முக்கிய குறிக்கோளாகும்.
நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் பதவிக்காலம் – குழுக்கள் அமைக்கப்பட்டதிலிருந்து ஒரு வருடம் ஆகும்.