TNPSC Thervupettagam

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவன விருதுகள் - 2016 & 2017

May 22 , 2018 2281 days 974 0
  • தேசிய தொழிற் நுட்ப தினத்தை நினைவு கூர்வதற்காகவும், பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினுடைய (Defence Research and Development Organisation-DRDO) பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் மாபெரும் பங்களிப்பினை கவுரவிப்பதற்காகவும் DRDO-வின் பல்வேறு ஆராய்ச்சியாளர்களுக்கு மத்திய இராணுவப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விருதுகளை வழங்கியுள்ளார்.
  • பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் (Scientific Advisor to Raksha Mantri), பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் முன்னாள் செயலாளர் மற்றும் DRDO-வின் பொது இயக்குநரான டாக்டர் வி.கே. சரஸ்வத்திற்கு (Dr V K Saraswat) 2017 ஆம் ஆண்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது (DRDO Lifetime Achievement Award – 2017) வழங்கப்பட்டுள்ளது.

  • பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் (Scientific Advisor to Raksha Mantri), பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் முன்னாள் செயலாளர் மற்றும் DRDO-வின் பொது இயக்குநரான டாக்டர்.வாசு தேவ் கல்குன்டே ஆத்ரே (Dr Vasudev Kalkunte Aatre) அவர்களுக்கு 2016-ஆம் ஆண்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 2016-ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைமைத்துவ விருது (DRDO Technology Leadership Award – 2016) ஏவுகணை மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவ அமைப்புப் பிரிவின் பொது இயக்குனர் (Director General of Missiles & Strategic Systems) மற்றும் புகழ்மிக்க ஆராய்ச்சியாளரான, பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகரான டாக்டர்.சதீஸ் ரெட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்