உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மெக்னீசியம் கார்பனேட், நிகோடின், புகையிலை, கனிம எண்ணெய் மற்றும் சுவையூட்டியான ‘சுபாரி’ ஆகியவற்றைக் கொண்ட சில வகை பான் மசாலாவைத் தடை செய்துள்ள இந்தியாவின் மூன்றாவது மாநிலமாக ராஜஸ்தான் உருவெடுத்துள்ளது.
இந்த தயாரிப்புகளின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை போன்றவை கூட தடை செய்யப் பட்டுள்ளன.
முன்னதாக மகாராஷ்டிராவும் பீகாரும் இதைத் தடை செய்திருக்கின்றன.