பாபா அணு ஆராய்ச்சி மையமானது (Bhabha Atomic Reseach Centre -BARC) பாபா கவாச் (Bhabha Kavach) எனும் அடுத்த தலைமுறை குண்டு துளைக்காத கவச ஆடையை (next-generation bulletproof jacket) உருவாக்கி உள்ளது.
அணு ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள இந்த குண்டு துளைக்காத கவச ஆடையானது மிகவும் விலை குறைந்த (cheaper) மற்றும் இலகு எடையுடைய (lightweight) கவசமாகும்.
இந்தியாவின் அணுசக்தி திட்டங்களின் தந்தை (father of Indian nuclear programme) என்றழைக்கப்படும் டாக்டர்ஹோமி பாபா (Dr. Homi J. Bhabha) அவர்களின் பெயர் கொண்டு இந்த கவச உடைக்கு “பாபா கவாச்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) மற்றும் மத்திய ரிசர்வ் போலிஸ் படை (Central Reserve Police Force-CRPF) ஆகியவற்றின் கோரிக்கைக்கு இணங்க, மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் டிராம்பே மையத்தினால் (Trombay centre) இந்த குண்டு துளைக்காத மேற்சட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலிஸ் படை, இந்தோ-திபெத்திய காவற்படை (Indo-Tibetan Border Police-ITBP), மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை (Central Industrial Security Force-CISF) ஆகியவற்றின் வீரர்களைக் கொண்ட கூட்டுக் குழுவால் இந்த குண்டு துளைக்காத கவச ஆடை சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
போரான் கார்பைட் (boron carbide) மற்றும் கார்பன் நானோ குழாய் பாலிமரின் (carbon nanotube polymer) கலவையால் இந்த பாபா கவாச் ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பாபா கவாச் எனும் குண்டு துளைக்காத கவச ஆடைகளினை பெருமளவில் உற்பத்தி செய்ய பாபா அணு ஆராய்ச்சி மையமானது பாபா கவாச் தொழில்நுட்பத்தை ஹைதராபாத்தில் உள்ள மிஷ்ரா தது நிகாம் (Mishra Dhatu Nigam) மையத்திற்கு பரிமாற்றம் செய்துள்ளது.
பாபா அணு ஆராய்ச்சி மையம்
பாபா அணு ஆராய்ச்சி மையமானது மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் முன்னணி அணுசக்தி ஆராய்ச்சி மையமாகும்.
பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முக்கிய கட்டாயப் பணி அணுசக்தி ஆற்றலின் அமைதி வழியிலான பயன்பாட்டை நீடிக்க வைப்பதாகும். முதன்மையாக அவற்றை ஆற்றல் உற்பத்திக்கு நீடித்த முறையில் பயன்படுத்துவதே ஆகும்.
இந்த கவசமானது5 கிலோ எடையுடையது.
இந்திய அரசானது 1954-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள டிராம்பேவில் அணுசக்தி ஆற்றல் நிறுவனத்தை (Atomic Energy Establishment -AEET) தொடங்கியது.
அணுசக்தி ஆற்றல் கமிஷன் (Atomic Energy Commission) கீழ் அணுசக்தி உலைகள் (nuclear reactors) மற்றும் தொழில்நுட்பத்திற்கான அனைத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக அணுசக்தி ஆற்றல் நிறுவனம் தொடங்கப்பட்டது.
1966-ஆம் ஆண்டு, ஹோமி பாபா மறைந்த பிறகு, 1967-ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி இந்த நிறுவனத்திற்கு “பாபா அணு ஆராய்ச்சி மையம்” என மறு பெயரிடப்பட்டது.